2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டு. செயலாளர் மீது தாக்குதல்

Suganthini Ratnam   / 2016 மே 22 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளரும் மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி ஆசிரியருமான பொ.உதயரூபன் மீது அக்கல்லூரியில் சனிக்கிழமை (21) தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்குள்ளான இவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாடசாலை மாணவர்களின் கல்வி அடைவு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில் விடுமுறை தினங்களில் இலவசமாக வகுப்புகளை தான் நடத்துவதாகவும்  இந்நிலையில், வழமை போன்று சனிக்கிழமையும் மகாஜனக் கல்லூரியில் வகுப்புகளை நடத்திக்கொண்டிருந்தபோதே தன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தாக்குதலுக்குள்ளான பொ.உதயரூபன் தெரிவித்தார்.  

மகாஜனக் கல்லூரியின் பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளரே தன் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல்ச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .