Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 18 , மு.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
((ரி.எல்.ஜௌபர்கான், றிபாயா நூர்)
காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி பிரதேசங்களுக்கு மின்சாரம் வழங்கும் காத்தான்குடி உப மின் விநியோக நிலையத்தின் பிரதான மின் வயர் தீப்பற்றியதில் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு 8 மணியளவிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றது. இதனால், காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி, காங்கேயனோடை
ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த பத்தாயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் மின்சாரமின்றி பாதிக்கப்பட்டுள்ளன.
இன்ந்தெரியாதோரின் நாசகார செயல் காரணமாக இந்த மின்வயர் தீப்பற்றியிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது. தீயணைப்பு படையினர் குறித்த தீயினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போதிலும் இன்னமும் மின்சாரம் வழங்கப்படவில்லை.
இதை சரி செய்யும் முயற்சியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக இலங்கை மின்சார சபையின் காத்தான்குடி மின் பொறியியலாளர் ஏ.எல். மாஹீர் தெரிவித்தார்.
சம்பவம் காரணமாக ரமழான் நோன்பின் இரவு நேர தொழுகைகளில் ஈடுபட்டு வரும் பள்ளிவாசல்கள் சிலவற்றிலும் தற்போது மின்சாரம துண்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026