Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2010 செப்டெம்பர் 29 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிபாயா நூர்)
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுகின்ற நேர கால அனர்த்த முன்னெச்சரிக்கை வேலை திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேசத்துக்கான அனர்த்த முகாமைத்துவ குழுக்கூட்டம் நேற்று புதன்கிழமை காத்தான்குடி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடி பிரதேச கிளையின் அனுசரணையுடன் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் நிறைவேற்று உத்தியோகத்தர் தர்மேந்திரா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ இணைப்பாளர் பெஞ்சமின் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட உப தலைவர் அப்துல்லா உட்பட கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அனர்த்த முன்னெச்சரிக்கை வேலைத்திட்டம் தொடர்பாக இக்கூட்டத்தில் ஆராயப்பட்டதுடன் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் மாரி காலத்தில் ஏற்படும் வெள்ள அனர்த்தத்தை தடுப்பதற்காக புதிய காத்தான்குடி தோனாக்கால்வாயை தோண்டி வெள்ளம் வடிந்தோட நடவடிக்கை எடுப்பதுடன் மழை காலத்தில் டெங்கு பரவுவதை தடுப்பதற்கும் வேலைத் திட்டங்களை மேற்கொள்வதென இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
காத்தான்குடி பிரதேச செயலகத்திற்குள் அனர்த்த வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகளில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளருக்கும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் அனர்த்த நேர கால வேலை திட்டப் பிரிவினால் முதலுதவி சிகிச்சைக்கான பைகளும் இதன் போது வழங்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
05 Jul 2025
05 Jul 2025