2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

வெடிவிபத்தில் படுகாயமடைந்த இளைஞர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணம்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 12 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.எஸ்.வதனகுமார்)

வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பழங்குடியிருப்பு மடுவிலுள்ள விவசாய வயலினுள் கிடந்த வெடிகுண்டை அகற்ற  முற்பட்டபோது, அது வெடித்ததில் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனளிக்காததால் நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

இந்த வெடிவிபத்து சம்பவம் கடந்த 2ஆம் திகதி இடம்பெற்றது.  

கன்னங்குடாவை சேர்ந்த பாலகப்போடி புரந்தரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது வயலில் கிருமிநாசினி தெளித்துக்கொண்டிருந்தவேளையில் அங்கு காணப்பட்ட இனந்தெரியாத பொருளை அகற்ற முற்பட்டபோது, இந்த வெடிவிபத்து ஏற்பட்டது.

குறித்த நபர் படுகாயமடைந்த நிலையில் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.  இந்நிலையிலேயே, குறித்த நபர் நேற்று காலை உயிரிழந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X