2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

கிழக்கில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு

A.P.Mathan   / 2011 ஜனவரி 10 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

கிழக்கு மாகாணத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையினால் பல லட்சம் மக்கள் நேரடியாக பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள். இந்நிலையில் இவர்களுக்கான சமைத்த உணவுகளை வழங்குவதில் பெரும் சிக்கல் நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதைகள் பல மூடப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்புக்கான விநியோகங்களிலும் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக மரக்கறி வகைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் பெரும் சிக்கல்நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

தரைவழிப் பாதைகளில் பாரிய வெள்ளம் பாய்ந்தோடுவதால் வாகனங்களில் அத்தியாவசிய பொருட்களை எடுத்துவருவதில் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே இதற்கு மாற்று நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் மேற்கொள்ள வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .