Super User / 2011 மார்ச் 04 , மு.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
	(ஜதுசன்)
	
	மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுவாஞ்சிக்குடி கடற்கரை வீதியில் அமைந்துள்ள வீடொன்றை உடைத்துக் கொண்டு புகுந்த திருடர்கள், அங்கிருந்த தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.  
	
	இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இந்;த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
	
	மோப்ப நாய்களின் உதவியுடன் திருடர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபட்டுள்ளன. 
	
	இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.ஆர்.மானவமடு தலைமையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
	
	அண்மைக்காலமாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
46 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
48 minute ago
1 hours ago