2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

உலக உள நல தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம்

Kogilavani   / 2012 ஒக்டோபர் 10 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி, ரி.லோஹித்)

உலக உள நல தினத்தையொட்டி மட்டக்களப்பில் இன்று உள நல விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடைபெற்றன.

இவ் விழிப்புணர்வு ஊர்வலங்கள் கிழக்கு பல்கலைக்கழக மட்டக்களப்பு வளாகத்திலிருந்தும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை முன்பாகவிருந்தும் மற்றுமொரு ஊர்வலம் ஊறணியிலிருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பிலுள்ள பிராந்திய சுகாதார அலுவலகத்தை சென்றடைந்தது.

'உலகளாவிய நெருக்கடியும் மன அளுத்தமும்' எனும் தொனிப் பொருளில் இவ் விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடைபெற்றன.
இந்த ஊர்வலத்தில் பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் கே.சதுர்முகம், உள நல வைத்திய நிபுணர் டாக்டர் டயன் யோகராஜன் உட்பட வைத்தியர்கள், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள், உள நல சமூக சேவையாளர்கள், பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தாதியர்கள் கலந்து கொண்டர்.

மன அழுத்தத்தின் அறிகுறிகள், அதிலிருந்து தப்பித்துக் கொள்ளல், அதற்கான நடவடிக்கை எடுத்தல் போன்ற விழிப்புணர்வுகள் தொடர்பான பதாதைகள் ஊர்வத்தில் சென்றோர் இதன்போது தாங்கியிருந்ததுடன் விழிபு;புணர்வு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

இவ் ஊர்வலங்களையடுத்து மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் அலுவலகத்தின் மண்டபத்தில் விழிபு;புணர்வு கூட்டம் ஒன்றும் நடைபெற்றது.

இந்த ஊர்வலத்தையும் மற்றும் ஒன்று கூடலையும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார அலுவலகமும், மற்றும் உள நல பாதிப்பாளர்களின் நலன்புரி அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .