2021 மார்ச் 03, புதன்கிழமை

சமாதான நீதவான்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2012 நவம்பர் 10 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி, எப்.எம்.பர்ஹான்)

காத்தான்குடி மற்றும் ஏறாவூரில் சமாதான நீதவான்களுக்கான நியமனக் கடிதங்கள் நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸின் காத்தான்குடி மத்திய குழு அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் யு.எல்.எம்.என்.முபீனின் வேண்டுகோளின் பேரில் நீதியமைச்சர் றவூப் ஹக்கீமின் சிபாரிசில்
நீதியமைச்சினால் இந்நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் யு.எல்.எம்.என்.முபீன் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் என்.கே.றம்ழான், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏறாவூர் மற்றும் காத்தான்குடி முக்கியஸ்த்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

இதன்போது காத்தான்குடி மற்றும் ஏறாவூரைச் சேர்ந்த 17 பேருக்கு சமாதான நீதவான்களுக்கான  நியமனக்கடிதங்கள்  வழங்கப்பட்டன.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .