2021 மார்ச் 08, திங்கட்கிழமை

ஓட்டமாவடியில் நடமாடும் சேவை

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 15 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


2013ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேசத்திற்கு மகுடம் கண்காட்சியையொட்டி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்கள்  தோறும்  நடமாடும் சேவை நடத்தப்படுகின்ற நிலையில்,  எட்டாவது நடமாடும் சேவை ஓட்டமாவடியில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

சமாதானத்துக்கும் அமைதிக்குமான அமைப்புக்களின் பேரவை ஓட்டமாவடி பிரதேச செயலகத்துடன் இணைந்து இந்நடமாடும் சேவையை நடத்தியது.

காலம் கடந்த பிறப்பு, இறப்பு பதிவு, திருமணப்பதிவு சான்றிதழ்களுக்கான விண்ணப்பம், புதிய மற்றும் காணமல் போன தேசிய அடையாள அட்டைகளுக்கான விண்ணப்பம், சாரதி அனுமதிப்பத்திரம் புதுப்பித்தல் ஆகியவற்றுடன் விவசாயப் பிரச்சினை, காணிப் பிரச்சினைகளுக்கான முறைப்பாடுகள், பொலிஸ் முறைப்பாடுகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. சட்ட ஆலோசனைகளும் இதன்போது வழங்கப்பட்டன.  அத்துடன், சமூக சேவைகள் திணைக்களத்தால் தெரிவுசெய்யப்பட்ட 3 அங்கவீனர்களுக்கு சக்கரநாற்காலிகள் வழங்கப்பட்டன.

விண்ணப்பங்களுக்கான முத்திரைக் கட்டணம், அடையாள அட்டைக்கான புகைப்படம் என்பற்றை சமாதானத்திற்கும் அமைதிக்குமான அமைப்புக்களின் பேரவை யு.எஸ்.எயிட் நிதியுதவியில் இலவசமாக வழங்கியது.

ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள எட்டு கிராம அலுவலகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் இந்நடமாடும் சேவையின் மூலம் நன்மையடைந்தனர்.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் எம்.சி.அன்சார் தலைமையில் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நடமாடும் சேவையை மட்டக்களப்பு மாவட்ட மேலதிக செயலாளர் கே.விமலநாதன், சமாதானத்துக்கும் அமைதிக்குமான அமைப்புக்களின் பேரவையின் இணைப்பாளர் பி.ஜெயபாரதி ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .