2020 நவம்பர் 28, சனிக்கிழமை

இருமாடிக் கட்டிடத் திறப்பு விழா

Kogilavani   / 2013 ஜூலை 22 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


ஓட்டமாவடி பாத்திமா ஸாஹிரா மகளிர் அரபுக் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட இருமாடிக் கட்டிடத் திறப்பு விழா நேற்று முன்தினம் இடம்பெற்றது.

கல்லூரி நிர்வாக சபைத் தலைவர் எம்.மஹ்மூத் தலைமையில் இடம்பெற்றபோது துருக்கி நாட்டைச் சேர்ந்த சதகாட்சல் அமைப்பினது பிரதிநிதிகளான ஸப்ரி மீரியா,  முஹம்மட் துருக்மன், கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.ரீ.எம்.றிஸ்வி, இலங்கை ஜமாதே இஸ்லாமின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

துருக்கி நாட்டைச் சேர்ந்த சதகட்சல் அமைப்பினதும் இலங்கை ஜமாதே இஸ்லாமியினதும் ஒன்பது மில்லியன் ரூபா நிதியளிப்பிலும் இலங்கை ஜமாதே இஸ்லாமியின்; வழிகாட்டலில் அமையப்பெற்ற இரு மாடிக் கட்டிடத்தில் நிர்வாக காரியாலயம், இரண்டு வகுப்பரைகள்;, கூட்ட மண்டபம், மாணவர் விடுதி என்பன அமையப் பெற்றுள்ளதாக கல்லூரியின் நிர்வாக சபைத் தலைவர் எம்.மஹ்மூத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--