2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

பின்தங்கிய பாடசாலைகளுக்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விஜயம்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 21 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 10 பின்தங்கிய பாடசாலைகளுக்கு இன்று திங்கட்கிழமை விஜயம் செய்த பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.

சுமார் 1,500 மாணவர்களுக்கு பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்துள்ளார்.

இதன்போது மாணவர் ஒருவருக்கு 250 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

கல்குடா மற்றும் மட்டக்களப்பு மத்தி ஆகிய கல்வி வலயங்களிலுள்ள  பின்தங்கிய 10 பாடசாலைகளுக்கே பிரதியமைச்சர் விஜயம் செய்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்,

பின்தங்கிய பாடசாலைகளில் கல்வி கற்கும் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மாணவர்களின் நலன்கள் பற்றி அறிந்து கொள்வதற்கும் பின்தங்கிய பாடசாலைகளின் வசதியீனங்கள் பற்றி ஆராய்வதற்காகாவுமே நான் இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஒருபகுதிப் பாடசாலைகளுக்கு நேரடியாக விஜயம் செய்துள்ளேன்.

பாடசாலைகளில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்திப்பதுடன் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மாணவர்களுக்கு கை கொடுத்து உதவுவதுமே எனது விஜயத்தின் நோக்கமாகும்.  எனவே எதிர்காலத்தில் எந்தவித பாகுபாடின்றியும் எல்லாப் பாடசாலைகளையும் ஒரே கண்ணோட்டத்தில் அணுகி அங்குள்ள குறைகள் நீக்கப்படும். மேலும், வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள  மாணவர்களின் நலனோம்பு விடயங்களிலும் கூடிய கவனம் செலுத்தப்படும் எனக் கூறினார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--