2021 மார்ச் 01, திங்கட்கிழமை

3 மாதங்களின் பின்னர் மட்டு.- கொழும்பு ரயில் சேவை ஆரம்பம்

Editorial   / 2021 ஜனவரி 18 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல். ஜவ்பர்கான் 

கொரோனா வைரஸ் காரணமாக மூன்று மாதங்களுக்கும் மேலாக இடை நிறுத்தப்பட்டிருந்த மட்டக்களப்புக்கும் கொழும்புக்கும் இடையிலான நேரடி ரயில் சேவை இன்று (18) காலை முதல் மீண்டும் ஆரம்பமானது.

இன்று காலை 6.10 மணிக்கு மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலிருந்து முதலாவது ரயில் கொழும்பை நோக்கிப் புறப்பட்டது. மாலை 3.15 மணிக்கு கொழும்பு ரயில் நிலையயைச் சென்றடையும்.

இதேபோன்று, கொழும்புக்கான இரவு நேர் கடுகதி ரயில் சேவை உட்பட அனைத்து சேவைகளும் இம்மாதம் 25ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ளதாக ரயில் நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .