2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

6 சிவப்பு வலயங்கள் கிழக்கில் பிரகடனம்

Princiya Dixci   / 2021 ஜனவரி 10 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், எம்.எஸ்.எம். ஹனீபா

கிழக்கு மாகாணத்தில் 6 பிரதேசங்கள், கொரோனா சிவப்பு வலயங்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளன என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அ.லதாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்படி, மட்டக்களப்பு – திருகோணமலை நகர், காத்தான்குடி, அட்டாளைச்சேனை, கல்முனை தெற்கு, சாய்ந்தமருது, உகன ஆகிய 6 சுகாதார பிரிவுகளே, இவ்வாறு சிவப்பு வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.

இதேவேளை, அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி பிரிவுக்குட்பட்ட ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, தீகவாபி ஆகிய கிராமங்களில் இதுவரை 87 கொரோனாத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் எனவும், 02 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அப்பிரிவின் வைத்தியதிகாரி டொக்டர் எஸ். அகிலன், கொரோனா தொற்று சிவப்பு எச்சரிக்கை வலயமாக அட்டாளைச்சேனை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையால், பொதுமக்கள் தொடர்ந்தும் சுகாதார அறிவுறுத்தல்களைப் பேணி நடந்துகொள்ளுமாறு வலியுறுத்தினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .