2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

அங்கத்துவத்தை அதிகரிப்பதற்கு தொழிலாளர்களை திசைதிருப்ப முயற்சி

Kogilavani   / 2016 டிசெம்பர் 11 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

தமது தொழிற்சங்கத்துக்கு அங்கத்துவர்களை அதிகரித்துக்கொள்ளும் நோக்கில், தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர், தொழிலாளர்களை பிழையான வழியில் திசைதிருப்பி வருவதாக தோட்டத் தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைந்துகொண்டால் மட்டுமே, வீடமைப்புத்திட்டத்துக்குள் உள்வாங்கப்படுவர் என்று கூறி ஏனைய தொழிற்சங்கத்தில் அங்கம் வகிக்கும், தொழிலாளர்களை தமது தொழிற்சங்கத்துக்குள் பலவந்தமாக வரவழைக்க அவர் முனைவதாக தொழிலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

டிசெம்பர் மற்றும் ஜுன் மாதங்களிலேயே தொழிற்சங்கங்களுக்கு அங்கத்துவர்கள் இணைத்துகொள்ளப்படுகின்றனர். இதனை கருத்திற்கொண்ட அவர், தமது தொழிற்சங்கத்துக்கு அங்கத்துவர்களை அதிகரித்துகொள்ளும் நோக்கில் இவ்வாறு செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், மேற்படி விடயத்தை சுட்டிக்காட்டி, மலையக மக்கள் முன்னணியில் அங்கம் வகிக்கும் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதி. பிரதமர் அமைச்சர் ப.திகாம்பரம் ஆகியோருக்கு கடிதம் அனுப்பவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--