2021 மே 12, புதன்கிழமை

அடிக்கல் நாட்டி வைப்பு

Sudharshini   / 2016 ஜூலை 24 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்,எஸ்.சுஜித்தா, காமினி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் வழிகாட்டலின் கீழ் ஒன்றிணைக்கபட்ட கிராமிய பாதைகளை புனரமைக்கும் திட்டத்துக்கமைய, நுவரெலியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட மெராயா, ஊவாக்கலை தோட்டத்தின் வெள்ளிமலை பிரிவுக்குச் செல்லும் 5 கிலோ மீற்றர் பாதையை புனரமைப்பு செய்வதற்கான அடிக்கல் நாட்டும் விழா,  நேற்று சனிக்கிழமை (23) நடைபெற்றது.

இந்நிகழ்வில் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், ஆர்.ராஜாராம், எம்.உதயகுமார், அமைச்சின் இணைப்பு செயலாளர் ஜீ.நகுலேஸ்வரன், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வீ. புத்திரசிகாமணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .