2021 மே 15, சனிக்கிழமை

‘அனைவருக்கும் நிவாரணம் வேண்டும்’

Kogilavani   / 2017 ஜூன் 02 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

“மண்சரிவு, வெள்ள அனர்த்தங்களினால் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிவாரணங்களை வழங்குவது போன்று, பகுதியளவில் பாதிப்படைந்துள்ள ஏனைய மக்களும் நிவாரணங்களை வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என இரத்தினபுரி மாவட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.  

இரத்தினபுரி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால், மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுப்பட்டிருந்த தொழிலாளர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள், மணல் அகழ்வில் ஈடுப்பட்டிருந்தவர்கள், சிறு தேயிலைத் தோட்டங்களில் ஈடுப்பட்டிருந்தவர்கள், தோட்டத் தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினர்களினதும் அன்றாட வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது.   

அனர்த்தங்களினால் நேரடியாக பாதிப்புக்கு உள்ளானவர்கள் தொடர்பிலேயே, கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.  

எனவே, ஏனையோர் குறித்தும் அரசாங்கமும் சமூக சேவை அமைப்பினரும் கவனம் செலுத்த வேண்டும்” என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .