2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

இனவாதம் பேசியவர்களுக்கு ‘இயற்கை, பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளது’

பா.திருஞானம்   / 2017 மே 29 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

“இனவதம் பேசி, நாட்டின் அமைதியைச் சீர்குலைக்க முயன்றவர்களுக்கு, இயற்கை, சிறந்த பாடத்தைக் கற்றுத்தந்துள்ளது. இயற்கையின் சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இன, மத,பேதமற்ற முறையிலேயே, உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன என்பதை, இனவாதம் பேசித் திரிபவர்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்” என்று, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.  

கண்டி, சிட்டிமிஷன் நிலையத்தில், சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார். அங்கு மேலும் கூறிய அவர்,  

“இயற்கையின் சீற்றத்தால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பலர் காணாமற் போயுள்ளனர். இலட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். ஆயிரக் கணக்கான வீடுகள் சேதமாகியுள்ளதுடன் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துகளும் அழிவடைந்துள்ளன.   
“அரச, அரசார்பற்ற நிறுவனங்கள் இணைந்து, அனர்த்த முகாம்களில் தங்கியுள்ளோருக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றன. இந்தச் செயற்பாடுகள் அனைத்தும் இன, மத, மொழிக்கு அப்பால், மனிதநேயத்துடனேயே முன்னெடுக்கபடுகின்றன. இதில் தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற வேறுபாடுகள் இல்லை.   

முகாம்களில், அனைத்து இன மக்களும் ஒரே கூறையின் கீழ், எந்தவிதமான வேறுபாடுகளும் இன்றியே இருக்கிறனர். மீட்புப் பணிகளும், இனவாதத்துடன நடைபெறவில்லை. அனைவரும் மனிதர்கள் என்ற எண்ணப்பாட்டிலேயே, மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.   
“எனவே, இனவாதம் பேசி நாட்டை மீண்டும் இரத்தக் காடாக்க நினைக்கும் இனவாதிகளுக்கு, இந்த இயற்கையின் கோரத் தாண்டவம் ஒரு படிப்பினையாக இருக்கும் என நினைக்கின்றேன்” என்று அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .