2021 ஜனவரி 23, சனிக்கிழமை

இரத்தினபுரி மாவட்ட முஸ்லிம் சம்மேளனம் நன்றி தெரிவிப்பு

Editorial   / 2019 நவம்பர் 17 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

உமாமகேஸ்வரி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு ஆதரவாக வாக்களித்த இரத்தினபுரி மாவட்ட முஸ்லிம் வாக்காளர்கள் அனைவருக்கும், இரத்தினபுரி மாவட்ட முஸ்லிம் சம்மேளனம்  தமது நன்றியைத் தெரிவித்துள்ளது.

சம்மேளனத்தின்  தலைவர்  ஏ.எம்.இஸ்மத், அதன் செயலாளர்  எம்.பி.எம்.பைரூஸ் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயெ, இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

“எமது நாட்டின் 8ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள  கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றி,  இந்நாட்டின் ஒருதரப்பினர் அல்லது ஒரு சமூகத்தினது மட்டும் வெற்றியல்ல.  இலங்கை வாழ் அனைத்து மக்களின் வெற்றியாகும். இந்த வெற்றிக்கு, பெரும்பான்மையின மக்கள் மாத்திரமன்றி  சிறுபான்மையின மக்களாகிய தமிழ், முஸ்லிம் மக்களும் தமது பூரண ஆதரவை வழங்கியுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளனர்.

“குறிப்பாக இரத்தினபுரி மாவட்ட வாழ் தமிழ், முஸ்லிம் மக்களில் பெரும்பாலானவர்கள், இரத்தினபுரி மாவட்ட முஸ்லிம் சம்மேளனத்தின் வேண்டுகோளுக்கமைய, வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களித்துள்ளனர்.

“இரத்தினபுரி மாவட்ட தமிழ், முஸ்லிம் மக்களின் தேவைகள், அபிவிருத்திகள் குறித்து, எதிர்காலத்தில் கூடுதல் அக்கறையுடன் செயற்படுவதுடன், பிராந்திய இணைப்பாளர்களுடன் கலந்தாலோசித்து இது சம்பந்தமான தேவையான நடவடிக்கைககளை மேற்கொள்ளும்” அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .