2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

’இலங்கை கிரிக்கெட் மீதுள்ள நம்பிக்கை வீணாகாது’

Editorial   / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நதீக பண்டார

இலங்கை கிரிக்கெட் அணி மீது, இலங்கை இரசிகர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை, ஒருபோதும் இல்லாமல் செய்ய முடியாது என, இலங்கை 20க்கு 20 கிரிக்கெட அணியின் தலைவர் லசித் மாலிங்க தெரிவித்தார்.

நியூசிலாந்து அணியுடனான 3ஆவது 20க்கு 20 போட்டியை வெற்றிகொண்டதன் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் இரசிகர்கள், வெளியிலிருந்து வரும் தகவல்களை நம்புவதில்லை என்றும் அவர்கள், கிரிக்கெட் பற்றியும் இலங்கை அணி பற்றியும் நன்றாக அறிந்து வைத்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

இளம் வீரர்களுடன் விளையாடும்போது, ஒரு வெற்றிகூட, பெறுமதி மிக்கதாகவே அமைந்திருக்கும் என்றும் வெற்றிகளை மய்யப்படுத்தியே, வெற்றிக்கான மனநிலை உருவாகும் என்றும் கூறினார்.

வெற்றிக்கு, ஊடங்களிடமிருந்தும் மக்களிடமிருந்தும் எவ்வாறான வரவேற்பு கிடைக்கும் என்பதை அறிந்துகொள்ள, புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .