2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

உலக முடிவுக்குச் சென்ற இளைஞன் மாயம்

Editorial   / 2019 நவம்பர் 27 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஏ.ஏ.எம்.பாயிஸ்

உலக முடிவைப் பார்க்கச் சென்ற இளைஞன், இதுவரையில் திரும்பவில்லை என, குறித்த இளைஞனை அழைத்துச் சென்ற வாகனச் சாரதி, பலாங்கொடை, சமனலவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தெஹிவளையைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞனொருவனே, இவ்வாறு காணாமல் போயுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இளைஞன் காணாமல் சென்று, இன்றுடன் (27) மூன்று நாள்கள் ஆவதாகவும் அவ்விளைஞனைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா பிரதேசத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த குறித்த இளைஞன், உலக முடிவுக்குச் செல்லும் நுழைவாயிலுக்குள் சென்றதாகவும் ஆனால், அதன் பின்னர் அவர் வெளியே வரவில்லை என்றும், குறித்த சாரதி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .