Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2016 ஜூலை 10 , பி.ப. 01:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் சிறப்பாக அமைந்துள்ளன. நல்லாட்சிக்கு மேலும் சிறப்பு சேர்க்க வேண்டுமெனில், 23 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலையும் உடனடியாக நடத்த வேண்டும்' என நுவரெலியா மாநகர சபையின் முன்னாள் முதல்வர் மஹிந்த தொடம்பே கமகே கோரினார்.
இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர், 'உள்ளூராட்சிமன்ற பிரதிநிதிகள் மக்களுடன் நேரடியான தொடர்புகளை கொண்டுள்ளனர். மக்களது அன்றாட தேவைகளிலும் செயற்பாடுகளிலும் அவர்கள் பின்னிப்பிணைந்து காணப்படுகின்றனர். அவசர தேவைகளின் போது மக்களை நாடிச் சென்று அவர்களது தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கின்றனர். உள்ளூராட்சிமன்றத் தேர்தலானது பிற்போடப்படுவதனால் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது' என்று அவர் குறிப்பிட்டார்.
'கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண காலநிலைக் காரணமாக கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மக்கள் நிர்க்கதிக்கு உள்ளாகினர். இப்பகுதிகளில் உள்ளூராட்சிமன்ற மக்கள் பிரதிநிதிகள் இல்லாத காரணத்தால் மக்களுக்கான சேவைகள் சென்றடைவதில் சிக்கல் நிலையை அரசாங்கம் எதிர்கொண்டது' என்றார்.
உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களே அடிமட்டத்திலிருந்து செயற்படுகின்றனர். எனவே, மிகவிரைவாக உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அவர் கோரினார்.
5 hours ago
7 hours ago
19 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
19 Oct 2025