2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

'உழைக்கும் மக்களை கடனாளியாக்குகிறார்'

Kogilavani   / 2016 மார்ச் 18 , மு.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஷ்

'நாட்டில் உழைக்கும் மக்களை கடன்காரர்களாக்குவதற்காக,  முட்டைப் போடுவது போல், வட் வரியை பிரதமர் அதிகரித்துள்ளார்' என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

பத்தனை-போகாவத்தை பெரமான பகுதியில் புதன்கிழமை (16) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.  

அங்கு அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், 'அரசாங்கம்  மக்களுக்கு இலவசமாக உணவு வழங்குவதில்லை. மக்கள் அன்றாடம் உழைத்தே உணவை உட்கொள்கின்றனர்.    வீதிகள், வைத்தியசாலைகள், பாடசாலைகள் போன்ற இன்னும் பல அபிவிருத்திகளை மேற்கொள்வதற்காகவே, மக்கள் அவர்களது வாக்குகளை வழங்கி, பிரதிநிதிகளை நாடாளுமன்றத்துக்கு அனுப்புகின்றனர். எனினும், மக்களுடைய வாழ்க்கை சுமைகளில், அரசாங்கம் எத்தகைய முன்னெடுப்புகளைச் செய்துள்ளது' என அவர் கேள்வியெழுப்பினார்.

'இரசாயன உரத்தைக் கூட வழங்க முடியாத இந்த அரசாங்கம், கூட்டுப் பசளைகளை  இட்டு, விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகளை வலியுறுத்துவது வேடிக்கையானது' எனவும் அவர் கூறினார்.

 'தற்போது நாட்டில் காணப்படும் அனைத்து பிரச்சினைகளையும்  தவிர்த்து நல்ல அரசாங்கத்தை அமைக்கும் சக்தியை கிராம மட்டத்திலிருந்து கொண்டு வருவதற்கான முன்கூட்டிய வேலைத்திட்டத்தை மக்கள் விடுதலை முன்னணி முன்னெடுத்துச் செல்கின்றது' என்றும் அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X