Editorial / 2017 ஜூன் 05 , பி.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
'சமூக மேம்பாட்டுப் பணிகளுக்காக, தேசிய ரீதியிலும் சமூக ரீதியலும் மரியாதையை உருவாக்கித் தருவதில் ஊடகங்களே முக்கிய இடத்தை வகிக்கின்றன. மலையகத்தில் ஊடகங்களால் வளர்ந்தவர்கள், அதனை அவமானப்படுத்துவது போல நடந்துக்கொள்வது கண்டிக்கத்தக்க விடமாகும்' என்று, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கூறியுள்ளது.
மஸ்கெலியாவில் அண்மையில் நடைபெற்ற வீடு திறப்பு விழாவில் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படாமைக்கு கண்டம் தெரிவித்துள்ள இ.தொ.கா, அது தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவித்துள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
'பாராட்டினால் மட்டும் ஊடகவியலாளர்களை தலையில் தூக்கி வைப்பதும் விமர்சனங்களை முன்வைத்தால் எரிந்து விழுவதும் நல்ல தலைமைத்துவத்துக்கு இலக்கணமாக இருக்க முடியாது.
ஊடகவியலாளர்களின் கடமைகளை தடுப்பது என்பது, தனது தலையில் தானே மண் போடுவதற்கு சமனான செயலாகும்.
குறிப்பாக, அமைச்சர்கள் பொதுமேடைகளில் பேசும்போது, பொறுப்புடன் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும். தாம் பேசும் உரையினால் மற்றையவர்கள் முகஞ்சுழிப்பார்களேயாயின் அது சிறந்த தலைமைத்துவத்துக்கு கௌரவமாக அமையாது.
பொதுசேவை என்று இறங்கிவிட்டால் விமர்சனங்களை எதிர்நோக்கியே ஆக வேண்டும். ஆனால், அந்த விமர்சனம் கண்ணியமாக இருக்க வேண்டும். இதுவே பண்புடைய அரசியல்வாதிகளின் அடையாளம். இதனை கருத்தில் கொள்ளாது, கைத்தட்டலுக்காக அநாகரிகமான வார்த்தைகளை பொதுமேடைகளில் பயன்படுத்துவது, மற்றையவர்களுக்கு வெறுப்பையே தரும் என்பதை நினைவூட்டுகின்றோம்” என்று மேலும் கூறுப்பட்டுள்ளது.
1 hours ago
28 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
28 Oct 2025