Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Sudharshini / 2016 ஜூலை 10 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன், பா.திருஞானம்
'பிராந்திய ஊடகவியலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கும் அவற்றுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கும் அரசாங்கம் குழுவொன்றை நியமிக்க வேண்டும்' என நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பிலான மகஜரொன்றும் ஜனாதிபதியிடம் அண்மையில் கையளிக்கப்பட்டுள்ளது. அம்மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'நுவரெலியா மாவட்டத்திலுள்ள பெருமளவிலான ஊடகவியலாளர்கள், சிரமங்களுக்கு மத்தியிலே தமது சேவையை முன்னெடுத்து வருகின்றனர். இவர்களில், சிலர் முழுநேர ஊடகவியலாளர்களாக செயற்பட்டு வருகின்றனர். பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியுள்ள இவர்கள், மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்து அதற்கு தீர்வுகளையும் பெற்றுக்கொடுக்கின்றனர்.
நாட்டில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள், பிராந்திய ஊடகவியலாளர்கள் தொடர்பில் பாராமுகமாகவே செயற்பட்டு வந்தன. ஊடகவியலாளர்களுக்குத் தீர்வையற்ற வாகனம் வழங்குவதாக கடந்த அரசாங்கம் அறிவித்தப்போதும் இதுவரையில் எமது மாவட்டம் உட்பட எந்த ஒரு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும் அந்த சலுகை கிடைக்கவில்லை. அது, கண்மூடி வித்தையாகவே உள்ளது.
எனவே, காணியற்ற பிரதேச ஊடகவியலாளர்களுக்கு சொந்த காணியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், எமது தொழில் துறைசார்ந்த ஊடகத்துறைக்கான கருவிகளை தீர்வையற்ற முறையில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தனியார், அரச துறைகளில் போக்குவரத்துக்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago