2021 ஜனவரி 27, புதன்கிழமை

ஓல்டன்- சாமிமலைக்கு பஸ் சேவையை நடத்துமாறு கோரிக்கை

Editorial   / 2019 நவம்பர் 25 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ சண்முகநாதன்

ஹட்டன் நகரிலிருந்து ஓல்டன் ஊடாக சாமிமலை நகருக்கு செல்வதற்கு, காலை வேளையில் உரிய முறையில் பஸ் சேவையை ஏற்படுத்தித் தருமாறு, பிரதேச மக்கள், இலங்கைப் போக்குவரத்துச் சபையின் ஹட்டன் டிப்போ முகாமையாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.  

மேற்படிப் பிரதேசத்துக்குச் செல்வதற்கு, ஹட்டன் நகரிலிருந்து காலை வேளையில் போதுமான பஸ் சேவை இல்லாத காரணத்தால், ஆசிரியர்கள், மாணவர்கள்,  தொழிலுக்குச் செல்லும் நூறுக்கணக்கான பொதுமக்கள்,  பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மொக்கா, மிட்லோதியன், எடம்ஸ்பீக், கார்ட்மோர், டீசைட் ஆகிய பிரதேசங்களிலுள்ள பாடசாலைக்கு சேவையாற்றவரும்  நூற்றுக் கணக்கான ஆசிரியர்கள், மிகத் தொலைவிலிருந்தே வருகைத் தருகின்றனர்.

காலை நேரத்தில் போதுமான பஸ் சேவை இல்லாத காரணத்தால், உரிய நேரத்துக்கு பாடசாலைகளுக்கு சமூகம் அளிக்க முடியாமல் உள்ளதாக ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே ஹட்டன் நகரிலிருந்து காலை 6.30க்கும் 7 மணிக்கும் இடையில் ஒரு பஸ் சேவை இடம்பெற்றால்,  காலை 8 மணிக்கு முன்னதாக பாடசாலையை அடைந்து விடக்கூடியதாக இருக்கும் என்று ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை,  வேலைக்குச் செல்லும் ஏனைய துறைகளைச் சார்ந்தவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

டிசெம்பர் மாதம் முதலாம் வாரத்தில்,  கல்வி பொதுத்தர சாதாரணத்தரப் பரீட்சை ஆரம்பமாகவுள்ளதால்,  மாணவர்கள் உரிய நேரத்தில் பரீட்சைக்கு சமூகமளிக்கும் வகையில் உடனடியாக இந்த விடயதில் கவனம் எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .