2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

கொட்டகலையில் மின் விளக்குகள்

Editorial   / 2020 மார்ச் 07 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளர் ராஜமணி பிரசாந்தின் எண்ணகருவில் உருவான தோட்டங்கள், கிராமங்கள் தோரும் வீதி விளக்குகள் பொருத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், கொட்டகலை பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட எல்லா பிரதேசங்களிலும் வீதி விளக்குகள் பொருத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எவ்விதக் கட்சி பேதங்களுமின்றி ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ்வேலைத் திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கைகளுக்காக ராஜமணி பிரசாந்த் 5 இலட்ச ரூபாய் நிதியை கையளித்துள்ளார்.

இவ்வேலைத்திட்டம் கொட்டகலை பிரதேசசபையினூடாக மேற்கொள்ளப்படுவதோடு, இவ்வேலைத்திட்டத்தை விரைவாகவும், சிறப்பாகவும் செய்து முடிக்குமாறு பிரதேச சபை உறுப்பினர்களிடம் ராஜமணி கேட்டுக்கொண்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .