2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

’கடந்த ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள் ஆளுமை அற்றவர்கள்’

Kogilavani   / 2017 மே 30 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


“இந்திய அரசு வழங்கிய நாலாயிரம் வீடுகளில், நான்கு வீடுகளுக்குக்கூட செங்கல்லை நாட்ட முடியாத ஆளுமையற்ற அமைச்சர்களே, கடந்த ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தனர். அமைச்சர் பழனி திகாம்பரம், மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சை பொறுப்பேற்றதன் பின்னரே, இந்திய வீடமைப்புத் திட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்திய அரசு வழங்கவுள்ள 10ஆயிரம் வீடமைப்புத் திட்டத்தையும், அமைச்சர் திகாம்பரமே முன்னின்று செயற்படுத்துவார். அதுவே மக்களின் விருப்பமுமாகும்” என்று, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்தார்.

மஸ்கெலியா பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில் அமைக்கப்பட்ட 25 வீடுகளின் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு மேலும் கூறிய அவர்,

“மே தின கூட்டத்துக்கு, சில அமைச்சர்களை அழைத்து வந்து 'காதல் ரோஜாவே...' பாட்டுப் பாடியும் அடுத்த அமைச்சரவையில் தங்களுக்கு அமைச்சுப்பதவி கிடைக்கும் என்றும் கைகொட்டி மகிழ்ந்தவர்கள், அமைச்சுக் கனவு பலிக்கவில்ல என்பதால், இன்று கவலையில் ஆழ்ந்துள்ளனர். அவர்களது அமைச்சுக் கனவு எப்போதும் பலிக்காது” என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர்,

“மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சின் கீழ், டன்சின், டயகம, பொகவான ஆகிய இடங்களில் வீடமைப்புத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

கொத்மலை, ஹெலபொடை தோட்டத்தில் 100 வீடுகள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, எதிர்வரும் 3 அம் திகதி நடைபெறவுள்ளது. இதுபோலவே, இந்தியா வழங்கவுள்ள பத்தாயிரம் வீட்டுத்திட்டத்தையும், அமைச்சர் பழனி திகாம்பரமே முன்னின்று செயற்படுத்துவார்” என்றும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X