2021 ஜனவரி 27, புதன்கிழமை

கத்திக்குத்தில் இளைஞன் பலி

Sudharshini   / 2016 ஜூலை 14 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

22 வயது யுவதியை ஏமாற்றி குடும்பம் நடத்திய 23 வயது இளைஞனை, யுவதியின் தந்தை குத்திக் கொலை செய்த சம்பவம், எல்ல, உடஆராவ பகுதியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த ஹர்ஷ விஜேசிறி என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

இவ்விளைஞன் ஏற்கனவே இரண்டுமுறை திருமணம் செய்தவரென்றும் மூன்றாவதாகவே மேற்படி யுவதியுடன் குடும்பம் நடத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய யுவதியின் தந்தை கைதுசெய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .