2021 ஜனவரி 23, சனிக்கிழமை

’கனேபல்ல தோட்ட மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துக’

Editorial   / 2019 நவம்பர் 19 , பி.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

யட்டியாந்தோட்டை - கனேபல்ல தோட்ட மக்களினுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு,தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். 

கனேபல்ல தோட்டத்திலுள்ள மக்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ள அமைச்சர் பழனி திகாம்பரம், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு, யட்டியாந்தோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு, தொலைப்பேசியூடாக அறிவுறுத்தியுள்ளார்.

மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட வேண்டும் எனவும் இந்த நாட்டில் மக்கள் ஜனநாயக ரீதியில் சுதந்திரமாக வாழ பொலிஸார் அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதுமாத்திரமன்றி பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக தொழிலாளர் தேசிய சங்கத்தின் கேகாலை மாவட்ட அமைப்பாளர்களை சங்கத்தின் தலைவர் அமைச்சர் பழனி திகாம்பரம் குறித்தத் தோட்டத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .