2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

கம்பத்தை தூக்கிச் செல்ல தடை விதிப்பு

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 27 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள் 

கம்பத்தைத் தூக்கவேண்டாம் அல்லது விளக்கை அணைத்து விட்டுக் கம்பத்தைத் தூக்கிக்கொண்டு செல்லுமாறு பொலிஸார் பணித்தமையால், இராம பக்தர்கள், கம்பமின்றியே, பஜனை பாடிக்கொண்டு சிவனொளிபாதமலைக்குச் சென்று திரும்பிய சம்பவமொன்று, கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மலையகத்தைப் பொறுத்தவரையில், மார்கழி மாதத்தில் இராமர் பஜனை பாடிக்கொண்டு, கம்பம் தூக்குவது வழக்கமான ஒன்றாகும்.  

சிவனொளிபாதமலையின் அடிவாரத்தில் இருக்கும் சீதகங்குலதென்ன தோட்டத்தைச் சேர்ந்தவர்களும், இவ்வாறே பஜனை பாடுவர். எனினும், அவர்கள் பஜனை பாடிக்கொண்டு சிவனொளிபாதமலைக்குச் செல்வதை ஒவ்வொரு வருடமும் வழக்கமாகக் கொண்டிருந்தனர். 

அதன்படியே, கடந்த சனிக்கிழமையும் சிவனொளிபாதமலைக்குச் சென்றபோது, சீதகங்குலதென்னையில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த அதிகாரிகள், கம்பத்தைத் தூக்கிக்கொண்டு சிவனொளிபாதமலைக்கு செல்லவேண்டாம். அவ்வாறு செல்வதாயின், விளக்கை அணைத்துவிட்டுச் செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். 

என்ன செய்வதென்று தெரியாது, அந்தப் பஜனைக் குழுவினர், கம்பத்தைக் கோவிலிலேயே வைத்துவிட்டு, சிவனொளிபாதமலைக்குச் சென்று திரும்பினர்.  

இந்த விவகாரம் தொடர்பில் வினவுவதற்கு, நல்லத்தண்ணி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியைத் தொடர்பு கொள்வதற்கு முயன்றபோதிலும், அம்முயற்சி நேற்று மாலைவரையிலும் கைகூடவில்லை.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .