Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 நவம்பர் 25 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
ஊவா மாகாண முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான், மலையக் கல்வி நிலை குறித்து கூறிய கருத்தை மீளப் பெறாவிட்டால், அவருக்கு எதிராக பெருந்தோட்டப் பகுதிகளில் எங்கும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக, தோட்டப்புற சிவில் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேற்படி அமைப்பின் உறுப்பினர் எஸ்.கமல், ஹட்டனில் நேற்று (24) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், பெருந்தோட்ட இளைஞர், யுவதிகள் கல்வி நிலையில் உயர்ந்த இடத்தில் உள்ளனர் என்றும் பெருந்தோட்டங்களில் கல்வி பயின்ற பலர், இன்று, பேராசிரியர்களாக உள்ளனர் என்றும் தெரிவித்தனர்.
இதேவேளை பெருந்தோட்டங்களில் கல்வி கற்று வெளியேறிய இன்னும் பலர், அரச, தனியார் நிறுவனங்களில் உயர்பதவிகளை வகிக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.
எனவே ஊவா மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான், கடந்தவாரம் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில் மலையக் கல்வி நிலைக் குறித்து தரங்குறைவாக பேசியக் கருத்தை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இல்லையேல், அவருக்கு எதிராக, பெருந்தோட்டங்கள் எங்கும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க நேரிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago