2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 20 பேருக்கு குளவிக்கொட்டு

கு. புஷ்பராஜ்   / 2019 நவம்பர் 26 , பி.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

டயகம - ஈஸ்ட் தோட்டத்தில், நேற்று (25) கொழுந்து பறித்துக்கொண்டிருந்தவர்கள் மீது குளவி கொட்டியதால், 20 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், டயகம ​பிரதேச வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 20 பேரில் 10 பேர், சிகிச்சை நிறைவடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் 10 தொழிலாளர்கள், தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தேயிலைத் தோட்டம், வெகுநாள்களாகத் துப்புரவு செய்யப்படவில்லை என்றும் இதனாலேயே, ஆங்காங்கே குளவிகள் கூடு கட்டியுள்ளதாகவும், தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காவோரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்காக, உரிய வாகன வசதிகள் கூட இருப்பதில்லை என்றும் இதனால், உரிய அதிகாரிகள் இது குறித்து கவனம் செலுத்தவேண்டும் என்றும், மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .