2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

கழிவகற்றும் நடவடிக்கைகளுக்கு 24 மணிநேர கண்காணிப்பு

Editorial   / 2020 ஜனவரி 14 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஏ.ஏ.எம்.பாயிஸ்

சப்ரகமுவ மாகாணத்திலுள்ள சகல உள்ளூராட்சி மன்றங்களில் கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகளை முறைப்படுத்தவும் கண்காணிக்கவும், சப்ரகமுவ மாகாணசபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.  

இதன் முதற்கட்டமாக, மாகாணத்திலுள்ள இரத்தினபுரி, கேகாலை மாநகர சபை எல்லைகளுக்குள் கமெரா தொகுதிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய 27 உள்ளூராட்சி மன்றப் பிரிவுகளிலும் இவற்றைப் பொருத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த நடவடிக்கை மூலம், தமது பிரதேச கழிவகற்றும் முகாமைத்துவத்தைச் சிறப்பாகச் செயற்படுத்த முடியும் என, உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.  

முழுப் பகுதிகளிலும் கமெராக்கள் பொருத்தப்படுவதால், பொறுப்பின்றித் தேவையற்ற இடங்களில் குப்பை கொட்டும் நபர்களைக் கண்டுபிடிக்க முடியும் என்றும் அத்துடன், கமெரா கண்காணிப்பில் இருப்பதால், தவறிழைக்க நினைக்கும் மக்களும் அச்சப்படுவர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .