பா.திருஞானம் / 2020 ஜனவரி 07 , பி.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி, நுவரெலியா பிரதான பாதையில் கொத்மலை பிரதேசத்துக்குட்பட்ட குடாஒயா பகுதியில் அமைந்துள்ள பஸ் தரிப்பிடம், கவனிப்பாரற்ற நிலையில் இருப்பதால், பயணிகளால் பயன்படுத்த முடியாமல் இருப்பதாக, குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
நுவரெலியாவிலிருந்து கண்டி நோக்கி செல்லும் பஸ்கள் நிறுத்துவதற்காக மத்திய மாகாண போக்குவரத்து அதிகார சபையினாலேயே, இந்த பஸ் தரிப்பிடம் அமைக்கப்பட்டது.
மேற்படி பஸ்தரிப்பிடம் தற்போது உடைந்து, கூரைகள் இன்றி காணப்படும் நிலையில், இதைப் புனரமைத்துத் தருமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டபோதிலும், இதுவரை எந்தவொரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, தெரிவிக்கப்படுகின்றது.
பஸ் தரிப்பிடத்தில் பஸ்ஸுக்காக் காத்திருக்க வேண்டுமானால், மழைக்காலங்களில் குடையுடனே செல்ல செல்லவேண்டும் என்றும் இந்தப் பிரதேசத்திலுள்ள குடாஓயா வித்தியாலய மாணவர்களும் ஆசிரியர்களும் இந்த பஸ் நிலையத்தையே பயன்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான நிலையில், இந்த பஸ் நிலையத்தை உடனடியாக திருத்தி அமைத்து கொடுக்க வேண்டியது, மத்திய மாகாண போக்குவரத்து அதிகார சபையின் கடமையாகும் என்று சுட்டிக்காட்டியுள்ள மக்கள், இதற்கு உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago