2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

’காவல்காரனாக மீண்டும் எச்சரிக்கிறேன்’

Editorial   / 2019 நவம்பர் 19 , பி.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர், நாட்டில் ஆங்காங்கே சில இனவாதிகளால் எமது சிறுபான்மை சமூகத்தின் இளைஞர்கள், பொதுமக்கள் தாக்கப்படுவது தொடர்பில் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

இனவாதத்துக்குத் துணைப்போகும் அனைவருக்கும் எமது எச்சரிக்கை என்றும் தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜமானது; ஆனால் வெற்றியின் போதையில் அவர்களின் எல்லையைக் கடந்து செயற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

​நாட்டின் ஜனாதிபதியாக, கோட்டபாய ராஜபக்‌ஷ தெரிவு செய்யப்பட்டதையடுத்து முன்னெடுக்கப்படும் வெற்றிக்கொண்டாட்டங்களில், சிறுபான்மை மக்கள் வதைக்கப்படுவதாகவும் யாருக்கு வாக்களித்தீர்கள் என்று கேட்டு, பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்த அவர், தங்களது பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு என்றும், தேர்தல் வெற்றியைக் கொண்டாடுவது உரிமையாக இருந்தாலும், அதில் மற்ற இனத்தைப் பழிவாங்குவது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயலாகும் என்றும் கூறியுள்ளார்.

இவ்வாறு, தனது சமூகத்துக்குத் தேவையற்ற வகையில் முன்னெடுக்கப்படுகின்ற இனவாதத் தாக்குதல்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அரச தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதாகவும் இனவாதத் தாக்குதல்கள் இடம்பெற்ற பிரதேச பொலிஸ் நிலைய உயர்அதிகாரிகளுக்கும் இது தொடர்பில் எச்சரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

தொடர்ச்சியாக இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெற்றால், 077-4004994 எனும் தன்னுடைய ​அலை​பேசி இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்துத் தெரியப்படுத்துமாறும் தன்னுடைய தொப்புள்கொடி உறவுகளுக்கு அமைச்சராகவோ தலைவனாகவோ அன்றி, காவல்காரனாக நிற்பது, தன்னுடை கடமை என்றும் அவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .