Niroshini / 2016 ஜூலை 17 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கணேசன், எஸ்.சுஜிதா, கு.புஸ்பராஜ்
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென். அன்றூஸ் தோட்டத்தில், இன்று ஞாயிற்றுக்கிழமை (17) ஏற்பட்ட கைகலப்புச் சம்பவமொன்றில் சுப்பையா முரளிதரன் (வயது 35) என்பவர் படுகாயமடைந்த நிலையில் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடே இந்தத் தாக்குதலுக்கு காரணம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு உள்ளான நபர், கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டப் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
58 minute ago
1 hours ago
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago
06 Nov 2025