2020 நவம்பர் 25, புதன்கிழமை

குழு மோதலில் வீட்டுக்கு தீ: எழுவர் கைது

Sudharshini   / 2016 மார்ச் 08 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்

புசல்லாவை, நிவ்பீகொக் தோட்டம் சப்லி பிரிவில் நேற்று (07) இரவு,  இரண்டு  குழுக்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு  காரணமாக வீடொன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பெயரில் 7 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த வீட்டில் உள்ள அனைத்து  பொருட்களும் தீக்கிரையாகியுள்ளதெனவும்  பொருட்களின் சேத விவரம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற காமன்கூத்து வைபவத்தின் போது, இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட முரண்பாடே இதற்கு காரணம் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .