2021 மே 10, திங்கட்கிழமை

சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்ந்தவர் கைது

Editorial   / 2018 மார்ச் 19 , பி.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

பொகவந்தலாவை கெசல்கமுவ ஆற்றுக்கு அருகாமையில், சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்ந்து கொண்டிருந்த 6 பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின்படி, நேற்று (18) பிற்பகல் 2 மணியளவில், பொகவந்தலாவை பொலிஸாரால் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

மாணிக்கக்கல் அகழ்வுக்குப் பயன்படுத்திய பல உபகரணங்கள், குறித்த நபர்களிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகவும், தப்பிச் சென்ற ஏனைய நபர்களையும், கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், பொகவந்தலாவை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X