2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

சபரிமலை யாத்திரிகர்கள் எச்சரிக்கையாக இருக்கவும்

Kogilavani   / 2015 நவம்பர் 20 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.செல்வராஜா   

ஐயப்ப விரதம் கடந்த 17 ஆம் திகதியுடன் ஆரம்பமாகியுள்ள நிலையில் இந்தியா, சபரிமலைக்கும் செல்லும் யாத்திரிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.  

இந்நிலையில், மலையக பெருந்தோட்ட பகுதிகளிலிருந்து சபரிமலைக்கு செல்லும் யாத்திகர்களை மையப்படுத்தி மோசடியாளர்கள் தமது கைவரிசையை காட்டி வருவதால் இதுதொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் ஊவா மாகாண பெருந்தோட்ட அமைச்சின் இணைப்பாளர் ப.சந்திரமோகன் விடுத்;துள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,

'பதுளை மாவட்டத்திலிருந்து கடந்த வருடம்  சபரிமலை சென்ற யாத்திரிகர்களில் பலர் மோசடியாளர்களால் ஏமாற்றப்பட்டனர்.

இவ்வருடம் மோசடியாளர்கள் அதிகரித்துள்ளனர். எனவே இது தொடர்பில் சபரிமலை யாத்திரிகர்கள் அவதானமாக இருக்க வேண்டும். இதுதொடர்பாக உதவிகள் தேவைபடும் பட்;சத்தில் 071-3401049 என்ற அலைபேசி இலகத்துக்கு தொடர்புகொள்ளுமாறு கோரப்படுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X