2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

சப்ரகமுவ மாகாணத்தில் பாடசாலைகளுக்கு நாளையும் பூட்டு

Sudharshini   / 2016 மே 19 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

சீரற்ற காலநிலை காரணமாக சப்ரகமுவ மாகாணத்திலுள்ள தேசிய பாடசாலைகள் உட்பட சகல பாடசாலைகளும் நாளைய தினமும்(20) (வெள்ளிக்கிழமையும்) மூடப்படும் என சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய தெரிவித்தார்.

சப்ரகமுவ மாகாணத்தில் தொடர்ந்து மண்சரிவு ஏற்பட்டு வருவதால், மாணவர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு நாளைய தினமும்(20) சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, மேற்படி மாகாணத்தில் சகல பாடசாலைகளுக்கும் நேற்றும்(18) இன்றும்(19) விடுமுறை வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .