Sudharshini / 2016 ஜூலை 18 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பைப் பெற்றுக்கொடுக்க, உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி, மாத்தளை நகரில், எதிர்வரும் 24ஆம் திகதி காலை 10 மணிக்கு, ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்படவுள்ளது.
சமூக நீதிக்கான வெகுசன அமைப்பின் ஏற்பாட்டிலேயே, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக, அவ்வமைப்பின் ஏற்பாட்டாளர் மாக்ஸ் பிரபாகரன் கூறினார்.
மாத்தளை நகரிலுள்ள மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு முன்பாக நடைபெறவுள்ள இப்போராட்டத்தில், கமினியூஸ்ட் தொழிலாளர் சங்கம், புதிய ஜனநாயக மாக்ஸிச லெனினிச கட்சி, முன்னிலை சோசலிச கட்சி உள்ளிட்ட பல அமைப்புகள் பங்கேற்கவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
1 hours ago
4 hours ago
02 Nov 2025
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
02 Nov 2025
02 Nov 2025