2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

சம்பள பேச்சுவார்த்தையை உடன் ஆரம்பிக்குமாறு கோரிக்கை

Kogilavani   / 2015 ஓகஸ்ட் 28 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்

தோட்டத் தொழிலாளர்களுக்கான  சம்பள உயர்வுப் பேச்சுவார்த்தையை உடனடியாக ஆரம்பிக்குமாறு மலையக விழிப்புணர்வு கழகத்தின் செயலாளர் ஜீவன் இராஜேந்திரன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பில் நேற்று வியாழக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த அவர், 'பெருந்தோட்ட
தொழிலாளர்களுக்கான கூட்டொப்பந்த உடன்படிக்கை நிறைவடைந்து ஐந்து மாதங்கள் கடந்துள்ளன. ஆனால், சம்பளப் பேச்சுவார்த்தைக்கு  இன்னும் தீர்வு எட்டப்படாத நிலையில் உள்ளது. இதனால், தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகியுள்ளனர்' என்றார்.

'நாடாளுமன்றத் தேர்தலுக்காக பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டது. எனினும் தேர்தல் நிறைவுபெற்றுள்ள நிலையில், மலையக அரசியல் தலைவர்கள்,  தோட்ட முதலாளிமார் சம்மேளனதுத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உடனடியாகத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க முன்வரவேண்டும்' என்றும் அவர் கோரியுள்ளார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .