Editorial / 2019 நவம்பர் 24 , பி.ப. 02:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.ஏ.எம்.ஹசனார்
கடந்த 30 வருடகால யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டு வந்த கோட்டாபய ராஜபக்ஷ இந்நாட்டு ஜனாதிபதியாகும் பிரதமராக, மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தெரிவாகியுள்ளமை, சிறுபான்மையினருக்கு மட்டட்ட மகிழ்ச்சியைத் தந்துள்ளது என, பண்டாரவளை ஸ்ரீ பத்திரகாளியம்மன் தேவஸ்த்தான பிரதானியும் 2015ஆம் ஆண்டு உருவாகிய ஒன்றிணைந்த எதிரணியின் தமிழ் பிரிவின் தலைவரும், இலங்கை தேசிய மக்கள் தொழில் சங்க நிறுவுநருமான பாண்டவ ஜோதிட கலாநிதி சிவஸ்ரீ சர்வா சுவாமி தெரிவித்தார்.
பண்டாவரளை, ஸ்ரீ பத்திரகாளியம்மன் தேவஸ்த்தான பிரதான மண்டபத்தில்,நேற்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும், மலையக மக்கள் சார்பாக வாழ்த்துத் தெரிவிப்பதாகக் கூறிய அவர், அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தலைமையிலேயே, 2015ஆம் ஆண்டு ஒன்றிணைந்த எதிரணியின் தமிழ் பிரிவு உதயமானது என்றும் கூறினார்.
அன்று தொடக்கம் இன்று வரை, தாங்கள் மலையக மக்களுக்க பலப் பணிகளைச் செய்து வருவதாகவும் ஐ.தே.க அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் வகையில், பல சத்தியாக்கிரகங்களை, அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தலைமையில் நடைபெற்றதாகவும் இதன்போது அவர் கூறினார்.
20 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
3 hours ago
4 hours ago