2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

டல்ஜித்துக்குப் பிணை

மொஹொமட் ஆஸிக்   / 2020 ஜனவரி 09 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தளை நகர சபை உறுப்பினர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட மாத்தளை மாநகர மேயர் டல்ஜித் அலுவிஹார, இன்று (09) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தலா ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியிலான இரண்டு சரீரப்பிணையிலேயே அவர், மாத்தளை நீதவான் நீதிபதி இந்திக அத்தநாயக்கவால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் இந்தச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருந்த மேயரின் சாரதியையும் பிணையில் விடுதலை செய்ய நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர், தற்போது மாத்தளை வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--