2021 ஜனவரி 23, சனிக்கிழமை

தகரங்களை ஏற்றிச்செல்ல வந்த லொறியை திருப்பி அனுப்பிய ஆதரவாளர்கள்

Editorial   / 2019 நவம்பர் 19 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

 

நோர்வூட் மைதானத்தில் சீல் வைக்கப்பட்டிருந்த 6,400 கூரைத் தகரங்களை ஏற்றிச் செல்வதற்காக வந்த லொறியை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் திருப்பியனுப்பியுள்ளனர் என்று, நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

நல்லாட்சி அரசாங்கத்தில், மலைநாட்டு புதிய கிராமங்கள், தோட்ட
உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், பெருந்தோட்ட மக்களுக்கு வழங்குவதற்காக் கொண்டுவரப்பட்ட 6,400 கூரைத்தகரங்களை, தேர்தல் காலங்களில் விநியோகிகப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையாளருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, அந்நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்களால்,  ஜனாதிபதித் தேர்தலுக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு, கூரைத்தகரங்களை விநியோகிக்க முடியாத வகையில், தகரங்கள் வைக்கப்பட்டிருந்த தளம் சீல் வைக்கப்பட்டது.

ஜனாதிபதித் தேர்தல் நிறைவுற்றுள்ள நிலையில், அக்கரப்பத்தனைப் பகுதியில் இருந்து குறித்த கூரைத்தகரங்களை  ஏற்றிச்செல்வதற்காக, நேற்று(19) லொறி ஒன்று வந்துள்ளதாகவும் அந்த லொறியை, பிரதேச மக்களும் இ.தொ.காவின் ஆதரவாளர்களும் வழிமறித்து திருப்பி அனுப்பியுள்ளனர் என்றும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் ரவி குழந்தைவேல், நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். 

கூரைத்தகரங்கள் மக்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டுமானால், 23ஆம் திகதிக்குப் பின்னரே வழங்கப்பட வேண்டும் என்று பொலிஸார் அறிவுறுத்தியுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .