பா.திருஞானம் / 2020 ஜனவரி 05 , பி.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி - நுவரெலியா பிரதான வீதி, தவலந்தன்ன நகரத்தில் அமைந்துள்ள பயணிகள் பஸ் தரிப்பிடம், வீதிப் போக்குவரத்து அதிகார சபையால் நிர்வகிக்கப்பட்டு வந்த போதிலும், கவனிப்பாரற்ற நிலையில் இருப்பதாக, குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பஸ் தரிப்பிடமானது, உடைந்த நிலையிலேயே காணப்படுகின்றது. நுவரெலியா, வெலிமடை, கதிர்காமம், பண்டாரவளை, பதுளை போன்ற நகரங்களுக்குச் செல்லும் அனைத்துப் பிரதான பஸ்களும், இந்த நகரத்திலேயே நிறுத்தப்பட்டு, பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்கின்றன.
அத்துடன், கொத்மலை நகருக்கு, தினமும் செல்லும் மக்களும் பாடசாலை மாணவர்களும் இந்தப் பஸ் நிலையத்தையே பயன்படுத்தி வருகின்றனர். எனவே, இந்தப் பஸ் தரிப்பிடத்தைத் திருத்தி, மக்கள் பாவனைக்காகக் கையளிக்குமாறு, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026