Kogilavani / 2016 ஜூலை 12 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
ஒரு குழந்தையின் தந்தையுடன் மலர்ந்த, தனது மகளின் காதலை ஏற்றுக்கொள்ள முடியாத தந்தையொருவர், அம்மகளைக் கத்தியால் குத்திய சம்பவம் பதுளை, உடுவரையில் திங்கட்கிழமை (11) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில், காயமடைந்த 22 வயதான யுவதி, தியத்தலாவை அரசினர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யுவதியின் தந்தையைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
'என் மகளுக்கும் ஒரு குழந்தையின் தந்தைக்கும் இடையில், தகாதமுறையில் காதல் மலர்ந்துள்ளது. அந்த தொடர்பை துண்டிக்குமாறு மகளை பலமுறை அறிவுறுத்தினேன். அதனை மகள் கேட்கவில்லை. ஆகையால், ஆத்திரத்தில் குத்திவிட்டேன்' என்று, சந்தேக நபரான தந்தை வாக்குமூலமளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யுவதியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம், தொடர்பிலான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago