Kogilavani / 2016 ஜூலை 13 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

மலையகத்தில் தனியாருக்குச் சொந்தமான சிறு தேயிலைத் தோட்டங்களில் வாழ்ந்து வரும் தொழிலாளர்களுக்கும், தனி வீடுகளை அமைத்துக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட கம்பனிகள், மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை மற்றும் இலங்கை அரச பெருந்தோட்ட யாக்கம் ஆகிய நிறுவனங்களைப் போன்று, மலையகப் பகுதிகளில் தனியாருக்குச் சொந்தமான சிறு தேயிலைத் தோட்டங்களில் வாழும் தொழிலாளர்களுக்கும், தனி வீடுகள் அமைத்துக் கொடுக்க அமைச்சர் திகாம்பரம் நடவடிக்கை எடுத்து வருவதாக, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்தார்.
ஹப்புத்தளை, நீட்வுட் தனியார் தோட்டத்திலுள்ள பதினொரு குடும்பங்களுக்கான தனி வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'மலையக மக்களுக்கு தனி வீடுகளைப் பெற்றுக்கொடுக்கும் தேசிய நிகழ்ச்சி நிரலொன்றை நாம் இப்போது உருவாக்கியுள்ளோம். இதன்மூலம் தனிவீடு எனும் எண்ணக்கருவுக்குள் காணி உரிமையும் நிலைநாட்டப்பட்டு வருகின்றது. 50 ஏக்கர் தோட்டங்கள் எனும் , தனியாருக்குச் சொந்தமான சிறு தேயிலைத் தோட்டங்களில் வாழும் தொழிலாளர்களின் நிலைமை, மிகவும் மோசமாக உள்ளது' என்றார்.
'இங்கு, மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் (Pர்னுவு) செயற்பாடுகள் இல்லை. எனவே, அமைச்சு மட்ட அபிவிருத்தி முன்னெடுப்புகள், இப்பகுதிகளுக்கு கிடைக்கப்பெறுவதில் சிக்கல் நிலவுகிறது. உட்கட்டமைப்பு வசதிகளைப் பெறுவதிலும் இந்த மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். நாட்டில் ஏனைய மக்களுக்கு உள்ள அதே காணியுரிமையை நாம் அரசியல் நிபந்தனை அடிப்படையில் வென்றெடுத்துள்ளோம். அதனை விட்டுக் கொடுக்கத் தயாரில்லை' என்று அவர் மேலும் கூறினார்.

24 minute ago
28 minute ago
39 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
28 minute ago
39 minute ago
2 hours ago