Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 08:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன்
ஒன்றிணைந்த தபால் சேவை ஊழியர்கள், நேற்று(19) நள்ளிரவு முதல் ஆரம்பித்துள்ள நாடளாவிய ரீதியிலான வேலை நிறுத்தப்போராட்டம் காரணமாக, வயோதிபர்கள் மற்றும் பயனாளர்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.
தபால் சேவை ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு மற்றும் சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட ஏழு கோரிக்கைகளை முன்வைத்தே, தபால் சேவை ஊழியர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இப்போராட்டம் காரணமாக, மலையகத்துக்கான தபால் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால், தமக்கு வந்து சேர வேண்டிய முக்கியக் கடிதங்கள் மற்றும் பணங்கள் கிடைக்கவில்லை என்று பயானாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இப்போராட்டம் காரணமாக, சமூக சேவை அமைச்சினால் வழங்கப்படும் முதியோருக்கான கொடுப்பனவை, பெறமுடியாது, தூர பிரதேசங்களில் இருந்து வருகை தந்த வயோதிபர்கள் பெரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
பலர் இப்பணத்தை பெற்றே, தமது மருத்துவ தேவைகளை நிறைவேற்றி வந்ததாகவும் தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வயோதிபர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, குரங்குமலை, எபோட்ஸிலி, செனன் போன்ற பிரதேசங்களிலிருந்து, ஹட்டனுக்கு வந்த மக்கள் ஏமாற்றத்துடனேயே, வீடு திரும்பினர்.
இதேவேளை, நேற்றைய தினம் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கும் தினமாக இருந்ததினால், சம்பளப்பட்டியல் பாடசாலைகளுக்கு செல்லாததன் காரணமாக, அதிபர்கள் பெரும் நெருக்கடி நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இப்போராட்டம் தொடருமெனில், தபால்சேவையை நம்பியிருக்கும் சாதாரண மக்கள் பாரிய பாதிப்பை எதிர்கொள்வர் என தெரிவிக்கப்படுகின்றது.
தபால்சேவை ஊழியர்கள், தமது கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஜூன் மாதம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர். எனினும், பிரதமரின் செயலாளர் உள்ளடங்கலான அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, மேற்படி பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது.
குறித்த பேச்சுவார்த்தையின்போது, தபால் சேவை ஊழியர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு ஆறு வாரங்களில் தீர்வு முன்வைக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.
எனினும், ஆறு வார காலம் கடந்த போதிலும், தமக்கான தீர்வு கிடைக்காத நிலையில், தபால் ஊழியர்கள் மீண்டும் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.
தமக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்காத பட்சத்தில், எதிர்வரும் ஜனவரி மாதம் பாரியளவிலான தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.
28 minute ago
3 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
3 hours ago
5 hours ago
5 hours ago