Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2019 நவம்பர் 11 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
16 ஆம் திகதி நடைபெறுவது பிரதேச சபைத் தேர்தலோ, நகரசபைத் தேர்தலோ, மாகாண சபைத் தேர்தலோ அல்லது நாடாளுமன்றத் தேர்தலோ அல்ல என்றும் இந்த நாட்டின் தலைவரைத் தெரிவுசெய்தற்கான தேர்தல் என்றும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து, தமிழ் முற்போக்குக் கூட்டணி ஏற்பாடு செய்திருந்த பிரசாரக் கூட்டம், தலவாக்கலை பொது விளையாட்டு மைதானத்தில், நேற்று (10) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர் மேலும் கூறுகையில்,
“இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு, இந்த நாட்டையும் எம்மையும் முன்னோக்கிக் கொண்டு செல்லக் கூடிய ஒருவரே, நாட்டின் ஜனாதிபதியாக தெரிவாக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“அவர் அனுபவமும் திறமையும் மக்களின் மனங்களைப் புரிந்தவராகவும் ஊழலற்றவராகவும் இருக்க வேண்டும். அப்படியானால் அதற்கு பொறுத்தமானவர் அமைச்சர் சஜித் பிரேமதாஸ என்பதை, இன்று இந்த நாட்டு மக்கள் தீர்மானித்துவிட்டார்கள். எனவே அவரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
“அன்று நாங்கள் வாக்களித்த ஜனாதிபதி, எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் எங்களை மறக்காமல் எங்களுக்குத் தேவையான வேலைகளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்றிக் கொடுத்தார். அதன் பயனாக, தனி வீட்டுத் திட்டம், கல்வி அபிவிருத்தி என்பன எங்களுக்குக் கிடைத்தது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
06 Jul 2025